அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து பிரித்வி ஷா அசத்தல்

0
486

இந்தியா – மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர் பிரித்வி ஷா சதம் அடித்து அசத்தியுள்ளார்.

ராஜ்கோட் :

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய டெஸ்ட் அணியின் 293 வது வீரராக அறிமுகமாகியுள்ள பிரித்வி ஷா மற்றும் கே.எல்.ராகுல் இணை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் கப்ரியல் வீசிய முதல் ஓவரில் எல்.பி.டபல்யூ முறையில் டக் அவுட் ஆகி கே.எல்.ராகுல் அதிர்ச்சியளித்தார்.

பின்னர் களமிறங்கிய புஜாரா மற்றும் பிரித்வி ஷா மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்தனர். இதனால், இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினர்.

அறிமுகப்போட்டி என்ற பதற்றமே இல்லாமல் அதிரடியாக விளையாடிய பிரித்வி ஷா 99 பந்துகளில் சதம் அடித்து ஆச்சரியப்படுத்தினார். இதன் மூலம் அறிமுகப்போட்டில் சதமடித்த 15-வது வீரர் எனும் பெருமையை அவர் பெற்றார்.

கடந்த ஜனவரி மாதம் கேப்டனாக U-19 உலககோப்பையை கைப்பற்றிய பிரித்வி ஷா, ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் சார்பாக சிறப்பாக விளையாடி ஜொலித்தார். இதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் இந்திய அணிக்கு தேர்வான அவர் அக்டோபர் மாதம் அறிமுகப்போட்டியிலேயே முதல் சதம் அடித்து பிரமிக்கத்தக்க வகையில் தன்னை நிரூபித்துள்ளார்.

37 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது, ஷா 103 ரன்களுடனும், புஜாரா 84 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here