சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று இரவு 7 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நிகழ உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இருப்பினும் இந்த சந்திப்பின் அஜென்டா, அதாவது என்ன உரையாடப்பட உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 18 தகுதி நீக்கம் எம்எல்ஏக்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஆளுநரை, முதல்வர் சந்திக்க உள்ளார் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. கருணாஸ் உள்ளிட்ட நான்கு அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் அதிமுக கொறடா மனு அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து ஆளுநரிடம் முதல்வர் விவாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த சந்திப்பு குறித்து பரபரப்பு நிலவுகிறது.