கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் பலத்தமழை: மக்கள் அவதி!

0
222

கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குமரி மாவட்டத்தில் பெய்த தொடர்மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் பலத்தமழை பெய்துவருகிறது. கன்னியாகுமரியில், நேற்று மதியம் 12 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை 2 மணி நேரம் விடாமல் பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறிப்பாக நாகர்கோவில் கேப் ரோடு, செம்மாங்குடி ரோடு, அவ்வை சண்முகம் சாலை, கோட்டார் ரோடு, பறக்கை ரோடு, கே.பி.ரோடு, இந்துக்கல்லூரி ரோடு, கோர்ட்டு ரோடு, வடசேரி ரோடு, பொதுப்பணித்துறை அலுவலக ரோடு, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி ரோடு போன்ற அனைத்து சாலைகளிலும் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதேபோல், தோவாளை, பூதபாண்டி உள்பட பல இடங்களில் பெய்த பலத்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில், தனியார் கட்டிடம் ஒன்றின் தரைகீழ் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களும், இருசக்கர வாகனங்களும் தண்ணிரில் மூழ்கின. இந்நிலையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here