கரூரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ஹவுஸிங்போர்ட் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் விவகாரத்தில் கரூர் கோட்டாட்சியர் நேரடி விசாரணை. கரூரை அடுத்த சணப்பிரட்டி பகுதியில் ஹவுசிங்போர்ட் சார்பில் குடியிருப்பு வளாகம் கட்டி கடந்த 20-வருடங்களுக்கு மேலாக சுமார் 100-குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் விளையாடுவதற்கு பொது இடம் ஒதுக்கப்பட்டது. இப்பகுதியில் தேவையான சாலை குடிநீர் சாக்கடை வசதிகள் செய்யப்படமால் உள்ளது. இதே போல் குழந்தைகள் விளையாடும் இடமும் பரமாரிப்பு இல்லாமல் உள்ளது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் உதவியுடன் குடிமாற்று வாரியம் சார்பில் சொந்த வீடு நிலம் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட குழந்தைகள் விளையாடும் இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்தனர். இதற்கு அப்பகுதியில் வசிக்கும் ஹவுசிங்போர்ட் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆயினும் இன்று குடிசைமாற்று வாரிய நிர்வாக பொறியாளர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் தினந்தோறும் அப்பகுதியில் கட்டுமான பணிகள் தொடர்பான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்ள வந்தனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் நாள்தோறும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்து வருகின்றனர். இதனால் அதிகாரிகள் காவல் துறையினர்
மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் இன்று கரூர் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் விசாரணை செய்தார்.
பின்னர் ஹவுஸிங் போர்ட் குடியிருப்பு வாசிகளிடம் உள்ள இடம் தொடர்பான ஆவணங்களையும் ஸ்லம் போர்ட் அதிகாரிகளிடம் இருந்த ஆவணங்களையும் ஆய்வு செய்தார்.
அப்போது ஹவுஸிங் போர்ட் குடியிருப்பு வாசிகள் இப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டாம். வேறு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டி கொள்ளுங்கள். இந்த இடம் ஹவுஸிங்போர்ட் குடியிருப்பு வாசிகளின் குழந்தைகள் விளையாடும் இடம் என கூறி கோட்டாட்சியரிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கேட்ட கோட்டாட்சியர் சரவணமூர்த்தி இரு தரப்பினரும் அவரவர் தரப்பில் உள்ள ஆவணங்களை எடுத்து கொண்டு கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வாருங்கள். இது தொடர்பாக சட்டப்படி என்ன வாய்ப்புகள் உள்ளதோ அதன் படி அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என கூறியதின் பேரில் ஸ்லம் போர்ட் அதிகரிகள் பணிகளை மேற்கொள்ளாமல் திரும்பி சென்றனர். இது குறித்து ஹவுஸிங்போர்ட் குடியிருப்பு சங்கதலைவர் சடையாண்டி (ஓய்வு பெற்ற துணை ஆட்சியர்) கூறும்போது ஹவுஸிங் போர்ட் குடியிருப்புவாசிகளுக்கு சொந்தமான இடத்தில் குடிசைமாற்று வாரியம் தரப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிட்டுள்ளனர். ஆரம்ப நிலையிலிருந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். நேற்று மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு அளித்தோம். அதனடிப்படையில் இன்று கோட்டாட்சியர் விசாரணை செய்ய வந்தார். எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து கூறியுள்ளோம். அதற்கு அமைதி பேச்சுவார்த்தைக்கு வர அழைப்பு விடுத்தார். அப்போதும் எங்கள் தரப்பு நியாத்தை எடுத்து கூறுவோம் என்றார்.
கரூர் செய்தியாளர்
பாக்கியராஜ்