கிரிக்கெட்டின் கடவுள் சச்சின், அரசர் டோனி – ஹாங்காங் வீரர் புகழாரம்

0
549

தெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுளாக இருந்தாலும் டோனி தான் கிரிக்கெட்டின் அரசர் என ஹாங்காங் வீரர் இஷான்கான் புகழாரம் சூட்டியுள்ளார்.
புதுடெல்லி:

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் டோனி ரன் எதுவும் எடுக்காமல் ‘டக்‘ அவுட் ஆனார். அவர் இஷான்கான் பந்தில் ஆட்டம் இழந்தார்.
பாகிஸ்தானை சேர்ந்த இஷான் கான் ஹாங்காங் அணிக்காக ஆடி வருகிறார். அவர் டோனியை கிரிக்கெட் கிங் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக இஷான்கான் கூறியதாவது:-
தெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுளாக இருந்தாலும் டோனி தான் கிரிக்கெட்டின் அரசர் (கிங்). நான் சுயசரிதை எழுத திட்டமிட்டுள்ளேன். அதில் டோனி தான் முக்கிய பங்காக இருப்பார்.

தெண்டுல்கர், டோனியை அவுட் செய்வது எனது கனவாக இருந்தது. தெண்டுல்கர் ஓய்வு பெற்றுவிட்டதால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. டோனியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் எனது கனவு நனவானது.

இவ்வாறு அவர் கூறினார்.

33 வயதான இஷான்கான் 15 ஒருநாள் போட்டியில் விளையாடி 29 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here