கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தைத் தடுக்க புதிய ஏற்பாடு

0
239

தமிழக நெடுஞ்சாலைத் துறை முதல்கட்டமாக கடம்பாக்கம் – மரக்காணம் இடையே விளம்பூர் பகுதியில் 300 மீட்டர் நீளமான வளைவில் நைலான் ரோலர்களை நிறுவியுள்ளது.

சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பல நாடுகளில் ஆபத்தான சாலைகளில் விபத்துக்களைத் தடுக்க நைலான் ரோலர்கள் மூலம் சாலையோரத் தடுப்பு அமைக்கப்படுகிறது. இது வாகன ஓட்டுநர்களுக்கு சாலையின் வளைவான பகுதிகளைத் தெளிவுபடுத்திக் காட்டுவதால் விபத்து ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

இந்த நைலான் ரோலர்கள் மூலம் சென்னை – பாண்டிச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையின் தடுப்புச்சுவர் புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத் துறை முதல்கட்டமாக கடம்பாக்கம் – மரக்காணம் இடையே விளம்பூர் பகுதியில் 300 மீட்டர் நீளமான வளைவில் நைலான் ரோலர்களை நிறுவியுள்ளது. இந்த ரோலர்கள் இரவு நேரத்தில் ஒளிர்வதால் வேகமாக வரும் வாகனங்கள் வளைவை தொலைவிலேயே பார்த்து வேகத்தை குறைத்துக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here