தமிழகத்திற்கு நீர் குறைறைக்கப்பட்டு இருப்பதை பாஜக வரவேற்கவில்லை – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்..

0
516

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலம் பெறுவோம் பலம் பெறுவோம் என்ற தலைப்பில் பாஜக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அதன் முதல் கட்டமாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை அம்பத்தூர் அடுத்த பாடியில் சந்தித்தார். அப்போது செய்தியாளர் சந்தித்த தமிழிசை,

காவேரி நீர் 14 டி.எம்.சி குறைக்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிப்பதாகவும், தமிழகத்திற்கு நீர் குறைறைக்கப்பட்டு இருப்பதை பாஜக வரவேற்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் காவேரி நீர் தொடர்ப்பான தீர்ப்பில் மகிழ்ச்சியடைய ஒன்றுமே இல்லை என்று தெரிவித்த அவர் நீதிமன்றம் அறிவித்ததுப்போல் 177 டி.எம்.சி தண்ணீரையாவது கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு உடனே வழங்க வேண்டும். இந்த உச்சபட்ச தண்ணீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here