தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாகீர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை

0
512

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாகீர் ‘ஹாட்ரிக்’ விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இதில் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். ஒருநாள் போட்டியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த 4-வது தென்ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இதற்கு முன்பு லாங்வெல்ட் (2005), டுமினி, ரபடா (2015) ஆகியோர் ஹாட்ரிக் சாதனை புரிந்து இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் இம்ரான் தாகீர் 24 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். #SAvZIM #ZIMvSA #ImranTahir

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here