பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க டிடிவி ஆதரவை நாடிய ஓபிஎஸ் – தங்கதமிழ்ச்செல்வன் பரபரப்பு!

0
220

சென்னை: டிடிவி தினகரன் உடன் கூட்டு சேர ஓ.பன்னீர்செல்வம் முயன்றதாக தங்கதமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய டிடிவி தினகரன்ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவுமான தங்கதமிழ்ச்செல்வன், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி டிடிவி தினகரனை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்சந்தித்தார்.

அப்போது முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க ஒன்றாக சேர அழைப்பு விடுத்தார். பழனிசாமி ஆட்சியை நீக்கி விட்டு, இருவரும் சேர்ந்து நல்லாட்சி வழங்கலாம் என்று வலியுறுத்தினார்.

இதேபோல் கடந்த வாரமும் டிடிவி தினகரனை சந்திக்க துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டார். ஆனால் தினகரன் சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், ஓபிஎஸ் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து சசிகலா மீது குற்றம்சாட்டி, தனி அணியாக பிரிந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here