இந்து சமய அறநிலைத்துறை புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்களைச் சார்ந்த திருவப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழா கடந்த 9 நாட்களாக முத்துமாரியம்மன் வெள்ளிரிஷபவாகனம் குதிரைவாகனம் மரரத வாகனம் முத்துபல்லாக்கு உள்ளிட்ட வாகனங்களில் தினமும் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 12ஆம் தேதியன்று தேரோட்டம் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட முத்துமாரியம்மன் ஊர்வலமாக எடுத்துசென்று தேரில் வைத்தனர்.
பிறகு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாரதனைகள் காண்பிக்கபட்ட பிறகு மாவட்ட ஆட்சியர் கணேஷ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் ஆகியோர் தேரைவடம்பிடித்து இழுத்து துவக்கிவைத்தனர் வானவேடிக்கையுடன் துவங்கிய தேரோட்டத்தில் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தேரைவடம்பிடித்து இழுத்தனர். காட்டுமாரியம்மன் கோயில் தேரோடும் வீதியில் முத்துமாரியம்மன் தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துவதற்கு பால்குடம் மற்றும் அலகுகள் குத்தி பூக்குழி இறங்கினார்கள்.
புதுக்கோட்டை செய்தியாளர்
எம்.பி.ரமேஷ்