பெரம்பலூர் மாவட்டம் கூத்தனூர் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

0
72

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகேயுள்ள நாட்டார்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கூத்தனூர் கிராமத்தில் கல்குவாரி ஏலம் விடப்படவுள்ளதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் தற்போது ஏலத்திற்கான நாட்கள் நிறைவடைந்துள்ளதால், அடுத்தக்கட்டத்திற்கான ஏல நடவடிக்கை கனிம வளத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனைக்கண்டித்து நேற்று பாடாலூர் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நிலையில் இன்று நாட்டார்மங்கலம் ஊராட்சிக்குட்ட கூத்தனூர் கிராமத்தில் உள்ள 5-கல்குவாரிகளை ஏலம் விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மினி பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரம்பலூர் செய்தியாளர்,

வசந்தகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here