ரஷ்யாவிடம் ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பில் ஏவுகணைகள் வாங்க இந்தியா ஒப்பந்தம்!!

0
324

ரஷ்யாவிடம் இருந்து 500 கோடி டாலர் (ரூ. 40,000 கோடி) மதிப்பிலான ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் இன்று டெல்லியில் இந்தியா, ரஷ்யா இடையே கையெழுத்தானது.

ரஷ்யாவிடம் இருந்து 500 கோடி டாலர் (ரூ. 40,000 கோடி) மதிப்பிலான ஏவுகணைகளை இந்தியா வாங்குகிறது. மேலும், எண்ணெய் வாங்குவதற்கான ஒபந்தமும் இன்று கையெழுத்தானது.

இந்தியாவும், ரஷ்யாவும் பல ஆண்டுகளாக நெருங்கிய உறவு வைத்திருக்கும் நாடுகளாக உள்ளன. இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அரசியல் தொடர்பான புரிந்துணர்வுகள் காலம் காலமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இருநாடுகள் இடையே ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடப்பது வழக்கம். நடப்பாண்டில் இருநாடுகள் இடையிலான 19வது உச்சி மாநாடு இன்று டெல்லியில் துவங்கியது. இதில் கலந்து கொள்ள நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டெல்லி வந்து சேர்ந்தார். அவருடன் ரஷ்ய பிரதிநிதிகள் குழு ஒன்றும் வந்துள்ளது.

இன்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்திற்கு வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பின்னர் இவர்களது சந்திப்பு நடந்தது. அப்போது இருநாடுகள் இடையிலான உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் இருநாடுகள் இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கிய ஒப்பந்தமாக ரஷ்யாவிடம் இருந்து 500 கோடி டாலர் (40,000 கோடி ரூபாய்) மதிப்பிலான S 400 ரக ஏவுகணைகள் வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ரக ஏவுகணைகள் 380 கி.மீட்டர் தொலைவுக்கு பயணித்து எதிரிகளின் கூடாரங்களை அழிக்கும் திறன் கொண்டது.

ரஷ்யாவிடம் இருந்து இந்த ஏவுகணைகளை வாங்கினால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்த எச்சரிக்கையையும் மீறிதான் இன்று இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதிப்போம் என்று மிரட்டுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு இதுபோன்ற மிரட்டல்களை விடுத்துள்ளது. ஏவுகணைகள் வாங்குவதில் இருந்து இந்தியாவிற்கு அமெரிக்கா விலக்கு அளிக்கும் என்று நம்பத்தகுந்த வாட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்பு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்ற தடை இந்தியா மீது அமெரிக்க வித்திருந்தபோதும், அதையும் மீறி, இந்திய ரூபாய் கொடுத்து கச்சா எண்ணெய்யை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, சீனா இடையிலான சர்வதேச எல்லைப் பகுதியில் இருக்கும் 4000 கி.மீட்டர் தொலைவை கண்காணிக்கவும், சீனாவுக்கு மிரட்டல் விடுக்கவும் இதுபோன்ற ஏவுகணைகள் இந்தியாவுக்கு தேவைப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து இந்த ரக ஏவுகணைகளை சீனா வாங்கியுள்ளது. இது மிகவும் உயர் தொழில்நுட்பங்கள் கொண்ட ஏவுகணைகள் ஆகும்.

எண்ணெய் ஒப்பந்தம்:
உடனடி எண்ணெய் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் ரஷ்யாவின் காஸ்புரோம் நிறுவனத்துடன் இந்தியாவின் ஓஎன்ஜிசி விதேஷ் ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது. மேலும், சைபீரியாவில் இந்தியா கண்காணிப்பு நிலையம் அமைக்கவும் ஒப்பந்தாமாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here