ரெட் அலர்ட் குறித்து மக்கள் பயப்பட வேண்டாம்: வருவாய் நிர்வாக ஆணையர்!

0
422

ரெட் அலர்ட் குறித்து பயப்பட வேண்டாம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி.

தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் குறித்து மக்கள் பயப்பட வேண்டாம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுமார் 25 செ.மீ அளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு வரும் 7ஆம் தேதி ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகளில் 15 பெரிய அணைகள் நிரம்பி உள்ளன. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அணைக்கு நீர்வரத்து, இருப்பு பற்றிய தகவலை வழங்க வேண்டும் என அணை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நீர் நிலைகளில் உடைப்புகள் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்ய 5 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. ஏற்கனவே மழையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here