சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் சர்க்கார் பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தேர்தல்ல எல்லோரும் போட்டியிட்டு சர்க்கார் அமைப்பாங்க, நாங்க சர்க்கார் அமைத்துவிட்டு தேர்தல்ல நிக்க போறோம் என்று அரசியல் சம்பந்தமாக காரசாரமாக பேசினார். இந்த நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் பேட்டி அளித்தார். பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய அவர் விஜயின் அரசியல் பேச்சு குறித்தும் கருத்தும் தெரிவித்தார்.
விஜய் அரசியல்
விஜயின் அரசியல் பேச்சு நன்றாக இருந்தது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. அரசியலுக்கு வருவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்