விரைவில் ஆட்சி மாற்றம் வரும். இப்போதைய அமைச்சர்கள் அப்போது சிறைக்கு போவார்கள்: உதயநிதி

0
269

ஜெயலலிதா இப்போது உயிரோடு இருந்தால், பெங்களூரு சிறையில் தான் இருப்பார் என்று உதயநிதி கூறியுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது அமைச்சர்கள் சிறைக்குப் போவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நேற்று இரவு திமுகசார்பில், அதிமுக அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

’இந்த பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்களிடம், நான் மேடை ஏறவில்லை. கீழே தொண்டர்களுடன் அமர்ந்து கொள்கிறேன் என்று சொன்னேன். ஆனால், அவர்கள் என்னை கட்டாயப்படுத்தி மேடையேற்றி விட்டார்கள். பரவாயில்லை. மேடையில் இருப்பதால் தான் உங்களைப் பார்க்க முடிகிறது. இந்த பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பல தடைகள் இருந்தது. நீதிமன்றத்தில் போராடி தான் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி பெற்று இருக்கிறோம். திமுக அப்படினு சொன்னாலே போராட்டம் தான். கருணாநிதியே அவருக்கான கடைசி இடத்தை போராடி தான் பெற்றார்.

இப்போது உள்ள முதல்வர் பழனிசாமி அடிக்கடி அம்மா வழியில் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொண்டு இருக்கிறார். உண்மையில் ஜெயலலிதா இப்போது உயிரோடு இருந்தால், பெங்களூரு சிறையில் தான் இருப்பார். அமைச்சர் எஸ்.பி வேலுமணி. அவர் வேலுமணி இல்லை. ஊழல் மணி. உள்ளாட்சித்துறையில் ஏராளமான ஊழல். குளங்களில் ஆகாய தாமரை அகற்றுகிறேன் என்று கூறி பல கோடி ரூபாய் ஊழல் செய்தவர். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். இப்போது அமைச்சர்களாக இருப்பவர்கள் அப்போது சிறையில் இருப்பார்கள். கருணாநிதியின் மகன் என்பதால் ஸ்டாலின் பதவிக்கு வந்துவிட்டதாக முதல்வர் பழனிசாமி கூறுகிறார். ஸ்டாலின் உழைத்து வந்தவர். பழனிசாமி சசிகலாவின் காலில் விழுந்து குறுக்கு வழியில் வந்தவர்.

ஸ்டாலினுக்கு அடுத்து வரிசையில் நான் நிற்கிறேனாம். ஆமாம். வரிசையில் தான் நிற்கிறேன். ஆனால், தொண்டர்களின் வரிசை. வரிசையில் கடைசியாக நிற்கிறேன். பதவிக்கு வந்து தான் எதையும் சாதிக்க முடியும் என்பது இல்லை. பதவிக்கு வராமலே சாதிக்கலாம். ஆனால், தொண்டர்களின் வரிசை. வரிசையில் கடைசியாக நிற்கிறேன். பதவிக்கு வந்து தான் எதையும் சாதிக்க முடியும் என்பது இல்லை. பதவிக்கு வராமலே சாதிக்கலாம்’.

இவ்வாறு உதயநிதி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here