ஹன்சிகா சொன்ன சீக்ரெட்!

0
435

சென்னை: தான் எப்படி எடையை குறைத்தேன் என்பது குறித்து நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார். எங்கேயும் எப்போதும் படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. விஜய், தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், அரண்மனை, அரண்மனை 2 படங்களில் பேயாகவு நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு கைநிறைய படங்கள் வைத்திருந்த ஹன்சிகாவுக்கு இப்போது மார்க்கெட் டல்லாக இருக்கிறுது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘மகா’ திரைப்படம் அவருடைய ஐம்பதாவது படமாகும். இதைத்தவிர, விக்ரம் பிரபுவுடன் துப்பாக்கி முனை, அதர்வாவுடன் 100 ஆகிய படங்களில் ஹன்சிகா நடித்து வருகிறார். ஹன்சிகாவிடம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது அவருடைய பப்ளி உடலமைப்பு தான். அதன் காரணமாகவே அவரை சின்ன குஷ்பு என ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் ஹன்சிகா தனது உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் தனது மார்க்கெட்டை மீண்டும் பிடிப்பதற்காகவே அவர் தனது உடல் எடையை குறைத்திருக்கிறார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நடிகர் மற்றும் மருத்துவர் சேதுராமனின் புதிய மருத்துவ கிளை தொடக்க விழாவில் ஹன்சிகா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தனது உடல் எடையை குறைத்தது எப்படி எனக் கூறினார். இதுகுறித்து அவர் பேசியதாவது,

எடையை குறைத்ததால் நம்பிக்கை

“உடல் எடையை குறைத்தால் நம்பிக்கை பிறக்கும். தன்நம்பிக்கை இருந்தால் எந்த விஷயத்தை நம்மால் செய்ய முடியும்.

நிறைய சிரமப்பட வேண்டும்

உடை எடையை குறைப்பதற்கு நிறைய சிரமப்பட வேண்டும். நான் சிரமப்பட்டு தான் உடல் எடையை குறைத்தேன். நிறைய ஒர்க்கவுட் செய்தேன்.

சர்ஜரி செய்யவில்லை

ஆனால் காஸ்மெடிக் சர்ஜரி செய்துகொள்ளவில்லை. பொழுப்பை கரைக்க பயன்படுத்தப்படும் கூல்ஸ்கல்ப்டிங் போன்ற கருவிகளை வலிக்காது என்றால் பயன்படுத்தலாம். ஆனால் நான் அதையெல்லாம் செய்யவில்லை.

குறிப்பிட்ட ஆடைகள்

ஒரு காலத்தில் என்னால் குறிப்பிட்ட நிற ஆடைகளை தவிர வேறு எந்த ஆடைகளையும் அணிய முடியாது. ஆனால் இப்போது எந்த நிற ஆடையானாலும் அணியலாம்

அதே முகம் தான்

நான் உடல் எடையை குறைத்திருந்தாலும், என முகம் மாறவில்லை. முன்பு போல் க்யூட்டாக தானே இருக்கிறேன். உடல் எடையை குறைப்பது வெளித்தோற்றத்துக்காக மட்டுமல்ல. அது நமது ஆரோக்கியத்தையும் மேம்படுத்தம்”, என ஹன்சிகா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here