ஆண் தேவதை திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை!

0
382

ஆண் தேவதை படத்தை வெளியிட தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவு.

ஆண் தேவதை திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை!

ஆண் தேவதை திரைப்படத்தை வெளியிட தடைவிதித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, காளி வெங்கட், சுஜா வருணி பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் `ஆண் தேவதை’. இந்தத் திரைப்படத்தை தனது சிகரம் சினிமாஸ் சார்பில் பக்ருதீனுடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா. ஜிப்ரான் இசையில், விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. .

இந்நிலையில் ஆண் தேவதை படத்தை திரையிட தடைவிதிக்க கோரி, சென்னையை சேர்ந்த நிஜாம் மொய்தீன் என்பவர் சென்னை 13-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது படத்தின் தயாரிப்பாளர் முகமது பக்ரூதின், படத் தயாரிப்பு பணிகளுக்காக தன்னிடம் வாங்கிய கடன் ரூ22 லட்சத்தை திருப்பி தராததால் படம் வெளிவர தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக தயாரிப்பாளர் அகமது பக்ரூதின், சிகரம் சினிமாவின் உரிமையாளர் சேக் தாவூத், ஆகியோர் பதிலளிக்க வேண்டும் எனவும் அதுவரை படம் வெளியாக இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டார்.

அதேபோல், ஔடதம் திரைப்படத்தை வெளியிடவும் இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here