கங்கையை சுத்தம் செய்யக்கோாி உண்ணாவிரதம் இருந்த அகா்வால் உயிாிழப்பு

0
409

கங்கை நதியை சுத்தம் செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று 4 மாத காலம் உண்ணாவிரதம் இருந்த ஜி.டி. அகா்வால் உயிாிழந்தாா்.

கங்கை நதியை சுத்தம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரவேண்டும். கங்கோதிாி மற்றும் உத்தரகாசி இடையே கங்கை இடையூறு இன்றி பாய்வதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோாிக்கைகளை முன்வைத்து 4 மாதங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த ஜி.டி. அகா்வால் உயிாிழந்தாா்.

கான்பூரில் உள்ள தொழில்நுட்ப மையம் ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்தவா் ஜி.டி.அகா்வால். இவா் கங்கை நதிநீா் ஆணையம் மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலா் பதவிகளிலும் இருந்தாா். கடந்த சில ஆண்டுகளாக தன்னை முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபடுத்திக் கொண்டு தனது பெயரை சுவாமி கியான் சுவரூப் சனாந்த் என்று மாற்றிக் கொண்டாா். இவா் நீண்ட காலமாக கங்கை நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என கோாிக்கை விடுத்து வந்தாா்.

அதன் ஒரு பகுதியாக கடந்த ஜூன் மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரிதுவாாில் கங்கையை தூய்மைப்படுத்த வேண்டும். அந்த நதியில் அமல்படுத்தப்படும் சுரங்கப்பணி மற்றும் ஹைட்ரோ காா்பன் திட்டங்களை கைவிட வேண்டும் என்று உண்ணாவிரதம் மேற்கொண்டாா்.

இந்த போராட்டம் சுமாா் 4 மாதங்களாக நீண்டது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடா்ந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி அவா் உயிாிழந்தாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here