ஏர் இந்தியா விமானத்திலிருந்து தவறி விழுந்த பணிப்பெண் படுகாயம்!

0
568

ஏர் இந்தியா விமானத்திலிருந்து பணிப்பெண் கீழே தவறி விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.

மும்பையில் புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்திலிருந்து பணிப்பெண் ஒருவர் கீழே தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திலிருந்து, ஏர் இந்தியா AI 864 என்ற விமானம் டெல்லிக்கு புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த 53 வயதுடைய பணிப்பெண் ஒருவர் கதவை பின்பக்கமாக தள்ளியதில் அவர் எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அருகிலுள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் விமானத்தில் இருந்த பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன், திருச்சியில் ஏர் இந்தியா விமானம் தறிகெட்டு ஓடி விபத்துக்குள்ளானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஏர் இந்தியா விமான பணிப்பெண்ணும் விமானத்திலிருந்து தவறி கீழே விழுந்த சம்பவம் விமான பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here