பாரா ஆசிய போட்டிகள்: ஷரத்குமார் தங்கம் வென்று சாதனை: மாரியப்பனுக்கு வெண்கலம்!

0
513

ஜகார்த்தா: பாரா ஆசிய போட்டிகளில், தமிழக வீரர் மாரியப்பன் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் மூன்றாவது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதன் 6-வது நாளில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் ஷரத்குமார் 1.90 மீ., உயரம் தாண்டி புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றர். மற்றொரு இந்திய வீரர் வருண் சிங் பாத்தி (1.82 மீ.,) வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

மாரியப்பன் வெண்கலம்:
சேலத்தை சேர்ந்த மாரியப்பன்(1.67 மீ.,) வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார். தங்கப்பதக்கம் வென்ற 26 வயதான ஷரத்குமார் பீகாரை சேர்ந்தவர். இளம் வயதில் போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட ஷரத்குமார் 2017-ம் ஆண்டு நடந்த பாரா உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுந்தர்சிங் குர்ஜார் (61.33 மீ.,) வெள்ளிப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் ரிங்கு (60.92 மீ.,) வெண்கலப்பதக்கம் பெற்றார்.

இந்தியா 9வது இடம்:
பாரா ஆசிய போட்டிகலில் இதுவரை 8 தங்கம், 17 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தமாக 50 பதக்கங்கள் வென்ற இந்தியா 9வது இடத்தில் உள்ளது. 255 பதக்கங்கள் ( 137 தங்கம், 69 வெள்ளி, 49 வெண்கலம் ) வென்ற சீனா முதலிடத்தில் உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here