பிங்க் நிறமாக மாறிய மும்பை ரயில் நிலையம்; பெண் குழந்தை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

0
463

மும்பை: சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் விழிப்புணர்விற்காக பிங்க் நிறத்தில் ஒளியூட்டப்பட்டது.

ஆண்டுதோறும் அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெண் குழந்தைகளை பெருமைப்படுத்தி, சர்வதேச அளவில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.

மேலும் அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நோய் பாதிப்பு நாடு முழுவதும் உள்ள இளம் பெண்களிடையே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த பாதிப்புகளை அறிந்து, உரிய சிகிச்சை பெற வலியுறுத்தி ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இருவிதமான விழிப்புணர்வு மேற்கொள்ளவும் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் பிங்க் நிறத்தில் ஒளியூட்டப்பட்டது.

நேற்று மாலை 6 மணி முதல் 9.30 மணி வரை பிங்க் நிறத்தில் காட்சியளித்தது. மேலும் மும்பையில் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சிவாஜி ரயில் நிலையம் மஞ்சள் நிறத்தில் ஒளியூட்டப்பட்டது.

ஒரே நாளில் பிங்க், மஞ்சள் ஆகிய இரு வண்ணங்களிலும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் காட்சியளித்தது பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here