ஆளில்லா ஹெலிகாப்டரை இயக்கி சாதித்த அஜித் மற்றும் தக்‌ஷா குழு – வைரல் வீடியோ!

0
391

சென்னை: நடிகர் அஜித் மற்றும் தக்‌ஷா குழுவினர் இணைந்து ஆளில்லா ஹெலிகாப்டரை இயக்கி சாதித்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பையும் தாண்டி புகைப்படக் கலை, பைக் ரேஸ், ஆளில்லா விமான தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார். இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டியில் ஆளில்லாத சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைக்கும் குழுவிற்கு அஜித் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடும் போட்டி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 111 பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் எம்.ஐ.டியின் தக்‌ஷா குழுவினரும் பங்கேற்றனர். அவர்களுடன் ஆலோசகரான நடிகர் அஜித்தும் சென்றார். இவர்களின் குட்டி விமானம் 15 அடி உயரத்தில் நிலைநிறுத்தப் பட்டுள்ளது.

மொத்தம் 6 மணி நேரம் 7 நிமிடம் 45 விநாடிகள் வரை பறந்து சாதித்தது. இதன் எடை 10 கிலோ வரைக் கொண்டது. எனவே ஏர் ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தலாம் என்று நடிகர் அஜித் ஆலோசனை வழங்கியுள்ளார். இதையடுத்து தக்‌ஷாவிற்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here