தாய்லாந்து, மாலத்தீவிற்கு குறைந்த விலையில் விமான சேவை தரும் கோஏர்!!

0
509

கோஏர் விமான சேவை நிறுவனம், முதன்முறையாக தாய்லாந்து, மாலத்தீவுகள் உள்ளிட்ட வெளிநாட்டிற்கு விமான சேவைகளை வழங்க உள்ளது.

குறைந்த விலையில் விமான சேவைகளை வழங்கி வரும் கோஏர் விமான சேவை நிறுவனம், முதன்முறையாக தாய்லாந்து, மாலத்தீவுகள் உள்ளிட்ட வெளிநாட்டிற்கு விமான சேவைகளை வழங்க உள்ளது.

வாடியா குழுமம், கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கோஏர் என்ற விமான சேவையைத் தொடங்கியது. மும்பையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த விமான சேவை, இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது.

இதனிடையே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்குவதற்கான உரிமை கோஏர் விமான சேவை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோஏர் விமான சேவை நிறுவனம் தனது முதல் வெளிநாட்டு விமான சேவையை வியாழக்கிழமை தொடங்கியுள்ளது. அதன்படி டெல்லியில் இருந்து புறப்பட்ட கோஏர் விமானம் தாய்லாந்தில் உள்ள சுற்றுலா நகரமான புஹெட்டை சென்றடைந்துள்ளது.

இது மட்டுமில்லாமல்,டெல்லி மற்றும் மும்பையிலிருந்து மாலத்தீவுகளுக்கும் விமான சேவையை கோஏர் நிருவனம் அக்டோபர் 12 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

கோஏர் மும்பை- புஹெட் பயணம்:

12 ஆம் தேதி முதல், வாரந்தோறும் செவ்வாய்,வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களுக்கு, புஹெட்டில் இருந்து மும்பைக்கு காலை 8.30 மணிக்கு விமானம் இயக்கப்படுகிறது.

அதேபோல் 13 ஆம் தேதி முதல், வாரந்தோறும் திங்கள்,புதன், சனி ஆகிய மூன்று தினங்களுக்கு மும்பையிலிருந்து புஹெட்டிற்கு அதிகாலை 1.25 மணிக்கு விமானம் இயக்கப்படுகிறது.

கோஏர் டெல்லி- புஹெட் பயணம்:

11 ஆம் தேதி முதல், வாரந்தோறும் வியாழன், ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களுக்கு, டெல்லியில் இருந்து புஹெட்டிற்கு அதிகாலை 1.10 மணிக்கு விமானம் இயக்கப்படுகிறது.

அதேபோல் 13 ஆம் தேதி முதல், வாரந்தோறும் புதன், சனி ஆகிய இரண்டு தினங்களுக்கு புஹெட்டில் இருந்து டெல்லிக்கு காலை 8.30 மணிக்கு விமானம் இயக்கப்படுகிறது. புஹெட்-மும்பை, புஹெட்-டெல்லி மற்றும் மும்பை-புஹெட், டெல்லி-புஹெட் பயணங்களுக்கு டிக்கெட் கட்டணம் ரூ.18,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோஏர் மும்பை- மாலத்தீவுகள் பயணம்:

14 ஆம் தேதி முதல், வாரந்தோறும் செவ்வாய்,வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களுக்கு, மாலத்தீவுகளில் இருந்து மும்பைக்கு மாலை 4.50 மணிக்கு விமானம் இயக்கப்படுகிறது.

அதேபோல் 14 ஆம் தேதி முதல், வாரந்தோறும் செவ்வாய்,வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களுக்கு மும்பையிலிருந்து மாலத்தீவுகளுக்கு மதியம் 1.30 மணிக்கு விமானம் இயக்கப்படுகிறது. இதற்கு டிக்கெட் விலை ரூ.17,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோஏர் டெல்லி- மாலத்தீவுகள் பயணம்:

17 ஆம் தேதி முதல், வாரந்தோறும் புதன், சனி ஆகிய இரண்டு தினங்களுக்கு, டெல்லியில் இருந்து மாலத்தீவுகளுக்கு மதியம் 12.45 மணிக்கு விமானம் இயக்கப்படுகிறது.

அதேபோல் 17 ஆம் தேதி முதல், வாரந்தோறும் புதன், சனி ஆகிய இரண்டு தினங்களுக்கு மாலத்தீவுகளிலிருந்து இருந்து டெல்லிக்கு மாலை 5.20 மணிக்கு விமானம் இயக்கப்படுகிறது. புஹெட்-மும்பை, இந்தப் பயணங்களுக்கு டிக்கெட் கட்டணம் ரூ.19,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here