சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதை முன்னிட்டு தங்கம் விலை எதிர்பாராத அளவு உயர்வு வருகிறது.
22 கேரட் தங்கத்தின் விலை!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,022 ஆகவும், சவரனுக்கு ரூ.24,176-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை!
தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.3,172 ஆகவும், சவரனுக்கு ரூ.25,376-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.41.50 காசுகளுக்கும், கிலோ ரூ.41,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.