ஆதரவற்றோருக்காக முதியோர் இல்லம் கட்டும் நடிகை ஹன்சிகா!

0
228

நடிகை ஹன்சிகா, ஆதரவற்ற முதியோர்களுக்காக இல்லம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளார்.

நடிகை ஹன்சிகா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் முன்னணி நடிகையாக இருந்தார். தற்போது தமிழில் அவருக்கு போதிய மார்க்கெட் இல்லை. இருந்தாலும் தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். விக்ரம் பிரபுவுடன் ‘துப்பாக்கி முனை’, அதர்வாவுடன் ‘100’ ஆகிய படங்களில் நடிக்கிறார். ஹன்சிகாவின் 50-வது படமாக ‘மஹா3 என்ற பெயரில் தயாராகிறது. மேலும் இவர் தெலுங்கிலும், மலையாளத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா அளித்த பேட்டி ஒன்றில், ‘’நான் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். ‘மஹா’ படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம். கதை பிடித்ததால் நடிக்க சம்மதித்தேன். வணிக படங்களில் அதிகம் நடித்து இருக்கிறேன். மற்ற மொழி படங்களை விட தமிழ் படங்களில் நடிப்பது மிகவும் பிடிக்கிறது.

‘மான் கராத்தே’ படத்தில் நடிப்பதற்காக 3 கதைகளை நிராகரித்தேன். எனது படத்தில் யார் கதாநாயகனாக நடிக்கிறார்கள். எனது கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்றெல்லாம் பார்ப்பது இல்லை. அந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்றுதான் யோசிப்பேன். ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்த நாளில் ஒரு ஆதரவற்ற குழந்தையை தத்து எடுப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறேன்.

மேலும் ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லம் ஒன்றை மும்பையில் கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறேன். இதற்காக நான் வரைந்துள்ள ஓவியங்களை கண்காட்சியாக வைத்து நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளேன்’’.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here