இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

0
992

ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இதையடுத்து, ப்யார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில், புரியாத புதிர் புகழ் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து மாகாபா மற்றும் பாலா சரவணன் ஆகியோர் பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களைக் கொண்டு பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹரிஷ் கல்யாண், ஷில்பாவை மடியில் தூக்கி வைத்துக்கொண்டிருப்பது போன்ற போஸ்டர் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் பிரபலம் மகத் வெளியிட்டுள்ளார். இப்படம் குறித்து இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறுகையில், ராஜா கிழிந்த ஜீன்ஸ் பேட் போட்டுக்கொண்டு, வீட்டிலும், தெருவிலும் இருப்பது போன்றும், அதோடு விலையுயர்ந்த கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டும் இருப்பார். ஆனால், ராணி வீட்டிலேயே இருப்பார் என்று கூறினார். மேலும், ஒரு பிடிவாதக்கார ஹீரோவின் காதல் தான் இப்படம் என்று கூறியுள்ளார்.

ஆனால், உண்மையில் சீட்டுக்கட்டில் இருக்கும் ஸ்பேட் மற்றும் ஹார்ட்டின் ஆகியவற்றிற்கு இடையில் இருக்கும் ஒரு போராட்டம் தான் இப்படம் என்பது மறைந்திருக்கும் கருத்து. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் பைக்கராகவும், பாக்‌ஷராகவும் நடித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்புசென்னை மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here