ஒரே ஓவரில் ‘6’ சிக்சர் அடித்து மிரட்டிய ஜஜாய்: ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக்கில் அசத்தல்!

0
626

ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர் ஹசரத்துல்லா ஜஜாய், ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல்., கிரிக்கெட் தொடரின் வெற்றியை தொடர்ந்து பாகிஸ்தான், கரீபிய தீவுகள் உள்ளிட்ட நாடுகளிலும், உள்ளூர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த வரிசையில் தற்போது ஆப்கானிஸ்தானிலும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் காபூல், பல்லாக் லெஜண்ட்ஸ் அணிகள் மோதிய போட்டியில், ஹசரத்துல்லா ஜஜாய் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து அசத்தினார்.

கெய்ல் சூறாவளி: 
இந்நிலையில் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பல்லாக் லெஜண்ட்ஸ் அணிக்கு 48 பந்தில் 2 பவுண்டரி, 10 சிக்சர் என கெய்ல் 80 ரன்கள் விளாச, அந்த அணி, 20 ஓவரில், 244 ரன்கள் குவித்தது.

இமாலய இ லக்கை துரத்திய காபூல் அணிக்கு ஜஜாய், 7 பந்தில் 21 ரன்கள் எடுத்த நிலையில் போட்டியின் 4 ஓவரை எதிர் கொண்டார். இந்த ஓவரில் முதல் இரண்டு பந்தில் சிக்சர் விளாசிய ஜஜாய், மூன்றாவது பந்து வைடாக ஆனது. இதற்காக ரீபாலிலும் சிக்சர் விளாசிய ஜஜாய், அடுத்த 3 பந்திலும் 3 சிக்சர்கள் அடிக்க, அந்த ஓவரில் 6 சிக்சர் அடித்து, 12 பந்தில் அரைசதம் கடந்தார்.

யுவராஜ் சாதனை: 
இதன் மூலம் ஜஜாய், குறைந்த பந்தில் அரைசதசம் அடித்த யுவராஜ் சிங் (12 பந்துகள், 2007) கெய்ல் (12 பந்துகள், 2016, பிக் பாஷ் தொடர்) ஆகியோரின் சாதனையை சமன் செய்தார்.

இருந்தாலும் ஜஜாய் 17 பந்தில் 62 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, காபூல் அணி, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here