சுழலில் சுத்தி சுத்தியடிக்கு இந்திய அணி: தட்டுத்தடுமாறும் விண்டீஸ்!

0
440

ஹைதராபாத்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், முதல் நாள் உணவு இடைவேளையின் போது விண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்சில் 272 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் முதல் பேட்டிங் தேர்வு செய்தார்.

அஷ்வின் அசத்தல்: 
இதையடுத்து களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் பாவெலை (22) அஷ்வின் வெளியேற்றினார். பிராத்பெயிட் (14) குல்தீப் சுழலில் சிக்கினார். ஹோப் (36) உமேஷ் வேகத்தில் வெளியேற, முதல் நாள் உணவு இடைவேளையின் போது விண்டீஸ் அணி, 3 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here