ஆஸி., தொடரில் இவரு கண்டிப்பா தேவை: முரளி விஜய்க்கு முன்னாள் வீரர் ஆதரவு!

0
741

சென்னை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முரளி விஜய்க்கு அணியில் வாய்ப்பு வழங்கலாம் என முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் 2 டெஸ்டிலும் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என தொடரை கைப்பற்றி அசத்தியது.

முரளி விஜய் அதிருப்தி:
இந்நிலையில் இந்திய அணி விண்டீஸ் தொடருக்கு பின், ஆஸ்திரேலியா செல்கிறது. இந்நிலையில் உள்ளூர் தொடரைப்போல ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடர் அவ்வளவு எளிதாக இருக்காது. இந்நிலையில், வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பிசிசிஐ.,. தேர்வுக்குழுவினர் மீது காட்டமாக பேசினார் முரளி விஜய்.

இன்னொரு வாய்ப்பு:
இதனால் இவருக்கு வாய்ப்பு இனி கிடைக்காமல் போகலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முரளி விஜய்க்கு அணியில் வாய்ப்பு வழங்கலாம் என முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here