சர்ச்சையில் சிக்கிய சித்து; பாக்., அமைச்சரவையில் சேர பாஜக சூப்பர் ஆலோசனை!

0
665

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்து, பாகிஸ்தான் அமைச்சரவையில் சேர பாஜக ஆலோசனை தெரிவித்துள்ளது.

இமாச்சல் மாநிலத்தில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் பங்கேற்ற பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துபேசிய போது, தமிழர்களின் உணவுப் பழக்கம் பிடிக்காது. அதை என்னால் நீண்ட நாட்களுக்கு சாப்பிட முடியாது.

தமிழர்கள் பேசும் ‘வணக்கம்’ என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தைகள் புரியாது. தமிழ்நாட்டில் வாழ்வதை விட, பாகிஸ்தானுக்குச் சென்றால் என்னால் சிரமமின்றி வாழ முடியும். ஏனெனில் பஞ்சாபின் கலாச்சாரமே பாகிஸ்தானிலும் இருக்கிறது என்றார்.

இது தமிழர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சித்துவின் கருத்து இந்தியாவை பிளவு படுத்துவதற்கான மனநிலையைக் காட்டுவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பத் மித்ரா தெரிவித்துள்ளார்.

சித்து தொடர்ந்து பாகிஸ்தான் புகழ் பாடி வருவதால், இம்ரான் கானின் அமைச்சரவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதனை ஒரு ஆலோசனையாகக் கூறுகிறோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here