ஹர்பஜனுக்காக திருக்குறலையே மாற்றிய ‘நோட்டோ’ படத்திற்கும், ஹீரோ விஜய் தேவர்கொண்டாவிற்கும் ஹர்பஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ திரைப்படம் இன்று ரிலீசானது. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா அறிமுகமாகிறார்.
‘நோட்டா’ படம் நிகழ்கால அரசியலை வெளுத்துவாங்கும் விதமாக உள்ளதால் நல்ல விமர்சனத்தை பெற்று வருகின்றது.
தெலுங்கு நடிகரின் தமிழ் அறிமுகமாக இருந்தாலும், தமிழகத்திலும் இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது
நோட்டா படத்தின் விளம்பரத்திற்காக விஜய் தீவரகொண்டா கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தமிழகத்தில் அரசியல் செய்ய விரும்பினால் ஹர்பஜன் போல் தமிழ் மிது ஆர்வம் கொள்ள வேண்டும் என கூறுவதைப் போல் திருக்குறளை, “அகர முதல எழுத்தெல்லாம் ஹர்பஜன் சிங் முதற்றே உலகு” என மாற்றப்பட்டுள்ளது.
நோட்டா படத்தில் இடம்பெற்ற அந்த காட்சியை ஹர்பஜனுக்கு டுவிட்டரில் டேக் செய்யததைப் பார்த்து, தற்போது ஹர்பஜன் பதிலளித்துள்ளார்.
அதில், “வணக்கம் அர்ஜுன் ரெட்டி எப்பிடி இருக்கீங்க தம்பி இப்போ தான் வீடியோ பாத்தேன் உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து போய்ட்டேன் இந்த பேரு, புகழ் எல்லாம் தமிழ் மக்கள் குடுத்தது வாழ வைக்குற தெய்வம் உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துக்கள்.” என தமிழில் டுவிட் செய்து அசத்தியுள்ளார்.