ரஃபேல் ஒப்பந்த குற்றச்சாட்டை மறுத்த டசால்ட்!

0
467

புதுடெல்லி: ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்பாக பிரான்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட தகவலுக்கு டசால்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இடம்பெற வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியதாக, முன்னாள் பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே தெரிவித்தார். இந்த கருத்துக்குப் பின் விவகாரம் சூடுபிடித்தது. அனில் அம்பானிக்கு ஆதரவாக மத்திய பாஜக அரசு செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது.

இதை மத்திய அரசு மறுத்தது. இதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என மத்திய தெரிவித்தது. இந்நிலையில், பிரான்ஸின் புலனாய்வு செய்தி நிறுவனமான Mediapart, டசால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவலை வெளியிட்டது.

அதில், இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருந்தால் தன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவலை டசால்ட் மறுத்துள்ளது. இது தொடர்பாக டசால்ட் நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில், ‘இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனத்தை சுதந்திரமாகவே தேர்வு செய்தோம். இந்த விஷயத்தில் எந்த கட்டாயமும் கொடுக்கப்படவில்லை’ என குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here