கமுக்கமாக காய் நகர்த்தும் ரஜினி: 47 ஆயிரம் கமிட்டி ரெடி

0
32

இதுவரை 70% பூத் கமிட்டி வேலைகள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள பூத் கமிட்டிகளை விரைவில் முடிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ரஜினி மக்கள் மன்றத்திற்கு 47 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப்போவதாகச் சொல்லிவிட்டு அடுத்தடுத்த படங்களில் மூழங்கிவிட்டார். இருப்பினும், பிடிப்புகளுக்கு மத்தியிலும் ரஜினி மக்கள் மன்ற செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் கடந்த 5ஆம் தேதி முதல் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுக்கான சீராய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த டாக்டர் இளவரசன், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ராஜசேகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 66,627 பூத் கமிட்டிகளில் 47,000 பூத் கமிட்டிகளை நியமித்துவிட்டதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 70% பூத் கமிட்டி வேலைகள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள பூத் கமிட்டிகளை விரைவில் முடிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here