ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 10வது நாளாக வேலை நிறுத்தம்!

0
484

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 10வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம்மீனவர்கள் இன்று 10வது நாளாக கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கூடுதல் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை உடனே விடுவிக்க வேண்டும், சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 3-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க போவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here