திருமணத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்த சமந்தா – நாக சைதன்யா!

0
42

தெலுங்கு சினிமாவில், முதலாவது திருமண நாளை கொண்டாடிய சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் திருமணத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்து திரையில் தோன்ற இருக்கின்றனர்.

தெலுங்கு சினிமாவில், முதலாவது திருமண நாளை கொண்டாடிய சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் திருமணத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்து திரையில் தோன்ற இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, கடந்த 7ம் தேதி இருவரும் முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். தற்போது விடுமுறையில் இருக்கும் இவர்கள், ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிஷா பகுதிக்கு சென்று கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்களை சமந்தா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு நாக சைதன்யாவின் 17வது படத்தில் இருவரும் இணைந்து ஜோடியாக நடிக்கயிருக்கின்றனர்.

அறிமுக இயக்குனர் ஷிவ் நிர்மன்ஸ் நாக சைதன்யா – சமந்தாவின் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தில், இவர்களுடன் இணைந்து திவ்யன்ஷா கௌசிக், ராவ் ரமேஷ், போசனி கிருஷ்ணா முரளி, சுப்பா ராஜூ ஆகியோர் பலர் நடிக்கின்றனர். கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here