திருச்சியில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் மீண்டும் துபாய் சென்றது

0
357

திருச்சி விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மீண்டும் துபாய்க்கு பறந்து சென்றது.

திருச்சியில் விபத்துக்குள்ளான விமானம், மீண்டும் துபாய்க்கு சென்றதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து அக். 12-ஆம் தேதி நள்ளிரவு, 136 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சுற்றுச்சுவர் மீதும் ஆண்டனா மீதும் மோதிச் சென்றது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 136 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அந்த விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது.

அப்போது சுவரில் உரசியதால் விமானத்தின் பின் பகுதியில் சிராய்ப்பு மற்றும் சேதம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விமான சக்கரங்கள் வானில் விமானம் பறக்கும் போது எரியும் சிக்னல் விளக்குகளும் சேதம் அடைந்தது தெரியவந்தது.

இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில், பாதுகாப்பு சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்த விமானம், மீண்டும் துபாய்க்கு பத்திரமாக புறப்பட்டுச் சென்றதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here