இரண்டாவது முறையாக நிறைந்த வைகை அணை: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0
312

வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதால், கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக 66 அடியை எட்டியுள்ள நிலையில் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது வைகை அணை, நீர்பிடிப்பு பகுதியான மூலவைகையாறு, வருசநாடு, வெள்ளிமலை வனப்பகுதி, கொட்டக்குடி ஆறு மற்றும் முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வைகை அணையில் தேக்கப்படுகிறது.

இதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை , ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டகளின் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கேரளாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக 7 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளவான 71 அடியை எட்டியது. இந்த நிலையில், இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியிருந்தது.

இதனையடுத்து தேனி , மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here