விஸ்வாசம் படத்தை விலைக்கு வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்!

0
306

அஜித் தற்போது நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழ்நாட்டு உரிமையை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் அதிக விலைக்கு வாங்கியுள்ளது.

நான்காவது முறையாக அஜித் & சிவா கூட்டணி ‘விஸ்வாசம்’ படத்திலும் தொடர்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் அஜித் இரு வேடங்களில் நடிக்கிறார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் படத்தில் ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தற்போது இந்தப் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை அறம் படத்தின் தயாரிப்பாளர் கோட்டாபாடி ஜே ராஜேஷின் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் பெரும்தொகை கொடுத்து வாங்கியுள்ளது. இதை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் தற்போது அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here